Saturday 12 November 2016

சி ஷார்ப்-3ம் பாடம்





.நெட்  ஃப்ரேம் ஒர்க்கின் இரு பகுதிகள்(.NET FRAME WORK)

1.   FRAME WORK CLASS LIBRARY(FCL)

2.   COMMON LANGUAGE RUNTIME(CLR)

FCL:

பொதுவான நிரலாக்கத்துக்கு தேவையான ஏற்கனவே உருவாக்கப்பட்ட Readymade க்ளாஸ்களின் தொகுப்பே frame work class library எனப்படுகின்றது.

அது பின் வரும் தேவைகளுக்காக உருவாக்கப் படுகின்றது.

  1. Graphics
  2. Multimedia
  3. Net working
  4. Internet
  5. Mobile computing
  6. Web applications

COMMON LANGUAGE RUN TIME(CLR)

இது ஒரு நிரல் இயக்கத்திற்கான சூழலை தருகின்றது. இது Memory handling மற்றும் ஒரு நிரல் இயங்குவதற்கான பாதுகாப்பை தருகின்றது.

பொதுவாக பின் வரும் சேவைகளை அது தருகின்றது.

1.   நிரல்களை இயக்குவது

2.   பிற பயன்பாடுகளிருந்து நினைவத்தை தனியாக பிரித்து தருதல்.

3.   Type safety-யை உறுதி படுத்துதல்

4.   MSIL ஆனதை Native  நிரலாக்க வரிகளாக மாற்றி இயக்குதல்

5.   நினைவகத்தை ஆளுதல்.

6.   மெடா டேட்டாவை (meta data) தருதல்

7.   மற்ற பயன்பாடுகளுடன் தொடர்வு கொள்ளுதல்.

காமன் டைப் சிஸ்டம்.

இது .நெட் ஃப்ரேம் வொர்க்கினால் சப்போர்ட் செய்யப்படும் எல்லா மொழிகளுக்கும் பொதுவான டேட்டா டைப்பினை தருகின்றது.அந்தந்த நிரல் மொழிகள் அதற்கு இணையான மாற்று பெயரில் இருக்கும்.உதாரணத்திற்கு விபி டாட் நெட்டில் Integer எனப்படுவது int என சி ஷர்ப்பில் இருக்கும்.இரண்டுமே பொதுவாக  .நெட்டை பொருத்தவரை System.Int32 என்கின்றது தான்.

Common language specification(CLS)

ஒரு மொழியானது டாட் நெட்டில் ரன் செய்யப்பட வேண்டுமென்றால் அதற்கு பொதுவான அந்த மொழியின் அடிப்படை கட்டமைப்பை மற்றும் அம்சங்களையும் பொறுத்தது ஆகும் அந்த SET OF RULES தான் CLS எனப்படுகின்றது.

MICROSOFT INTERMEDIATE LANGUAGE(MSIL)

டாட் நெட்டில் முதலில் எந்த மொழியில் எழுதியிருந்தாலும் முதலில் அது கம்பைல் செய்யும் போது அது MSIL எனப்படும் MICROSOFT INTERMEDIATE LANGUAGE ஆக மாற்றப் படும். பின்பு run செய்யும் போது JIT(JUST INTIME COMPILER)ல் இயக்கப்படும். பொதுவாக ஜாவாவில் கம்பைல் செய்யும் பொழுது முதலில் கிளாஸ் ஃபைல் ஆக மாற்றப்படும்.பின்பு எந்த பிளாட்ஃபார்ம் என்றாலும்.அதற்குறிய JVM-ஆல் (ஜாவா வெர்ச்சுவல் மெஷின் ) இண்டர்பிரட் செய்து இயக்கப்படும். இதனால் தான் ஜாவா Platform independent எனப்படுகின்றது. ஜாவா கிளாஸ் ஃபைலினை MSIL உடன் ஒப்பீடு செய்யலாம்.

ஜாவா கிளாஸ் ஃபைலை நம்மால் வாசிக்க முடியாது. ஆனால் MSIL அப்படியல்ல .அது ஒரு தனி மொழியாகும். மேலும் இணையத்தில் MSIL என்பதற்கென்றே தனி புத்தகங்கள் இருப்பதாக வாசித்த்திருக்கின்றேன்.



DLL எனப்படுவது என்ன?

இதன் முழு வடிவம் Dynamic link library என்பதாகும்.இந்த லைப்ரரி ஆனது நிரலாக்க வரிகள் (codings மற்றும் தரவுகளை(datas) கொண்டது. இவை ஒரே சமயத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட நிரல்களில் உபயோகிக்கலாம். உதாரணத்திற்கு Comdlg32 DLL  ஆனது விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் பொதுவாக dialog box மற்றும் அதன் செயப்பாடுகள் ஆகியவற்றில் பயன் தருகின்றது.. ஒவ்வொரு நிரலும் இதனை பயன்படுத்தி open dialog box செயல்பாடுகளைப் பெறலாம்.

DLL  -ஐ பயன்படுத்தி ஒரு நிரலை வெவேறு components ஆக modularize செய்யலாம்.உதாரணத்திற்கு ஒரு அக்கவுண்டிங் நிரலானது வெவ்வேறு modul;e ஆக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு module ஆனதையும் இன்ஸ்டால் செய்தால் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் main program ஆனதில் load செய்து பயன் படுத்தலாம்.

ஒரு DLL ஆனது பின் வரும் நண்மைகளைக் கொண்டது.

1. நிரலாக்க வரிகளை தனிதனி மாடூல் ஆக பிரிப்பது

2.கோடிங்கை மறு பயன்பாடு செய்தல்.

3.நினைவகத்தை திறனுடன் கையாளுதல்

4.ஹரர்ட் டிஸ்க் உபயோக குறைவு.
Meta Data:

இது மெடா டேட்டா எனப்படுவது மற்ற டேட்டாக்களை விவரிக்கும் டேட்டா ஆகும். Meta  என்ற prefix ஆனது தொழில் நுட்ப வார்த்தைகளில் பின் வரும் அர்த்ததில் பயன்படுகின்றது..அது வரையறை அல்லது விளக்கம்.உதாரணத்திற்கு அதாவது சரியான டேட்டாவை தேர்வு செய்து அதனுடன் இனைந்து இயங்குவது என்பதாகும்.
  
-                                     ---மீண்டும் சந்திப்போம்.
                            முத்து கார்த்திகேயன் ,மதுரை

No comments:

Post a Comment