Monday 7 November 2016

சி ஷார்ப் –பாடம்-2 டாட்நெட் ஒரு அறிமுகம்.





                                             ஜாவாவைப் பொருத்தவரை பொதுவாக இப்படிச் சொல்வர்கள்."write once in java and run any where".அதாவது ஜாவா ஒரு portable மொழியாகும்.ஒரு பிளாட்ஃபார்மில் எழுதிய நிரலை(program) எந்த பிளாட்ஃபார்மிலும் அப்ப்டியே இயக்கலாம். ஆனால் டாட்நெட்டிலோ எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம். ஆம் டாட்நெட் c#,c++,vb,cobol என நிறைய மொழிகளை ஆதரிக்கிறது.
                   டாட்நெட்டில் எந்த மொழியில் எழுதினாலும் அவை முதலில் complie செய்யப் ப்ட்டு il(intermediate language) ஆக மாற்றப் படுகிறது. இந்தIL(MSIL) ஜாவாவின் class ஃபைல்கள் போன்றதன்று. ஏனென்றல் class ஃபைல்கள் படிக்க முடியாதவை.ஆனால்MSIL தனி மொழியாகும். இதற்கென்றே தனியாக புத்தகங்ககள் உண்டு.



டாட்நெட் பின்வரும் மொழிகளை ஆதரிக்கின்றது.

c#
c++
visual basic
jscript.

மேலும் மூன்றாம் நபர் மொழிகளான
cobol
eiffel
perl
phython
small talk.
mercury

ஆகியவற்றையும் அதரிக்கின்றது.


டாட்நெட்டின் பயன்கள்

1. எளிதானது.
2. விரைவானது.
3. நிறைய  library class உள்ளடக்கியது.இவை எல்லா மொழிக்கும் பொதுவானது என்பது குறிப்பிடத்தக்கது.
4. நிறுவது எளிது.
5. குறைந்த பட்ச பிழைகள் கொண்டது.

c#ம் டாட்நெட்டும்
சி ஷார்ப் -டாட் நெட்க்கென பிரெத்யேகமாக உருவாக்கப்பட்ட மொழியாகும். டாட்நெட்டில் பயன்பாடுகள் உருவாக்கும் போது நிரலாளர்கள் (project) பெரும் பாலும் தேர்ந்து எடுக்கும் மொழி c# ஆகும்.சமீபத்திய பதிப்பு (version )  c# 4.0 ஆகும்.
.NET பயன்பாடுகள்

.
.NET கொண்டுவெவ்வேறு விதமான பயன்பாடுகளை உருவாக்கலாம். மேலும் ஒரு டாட் நெட் solution வெவ்வேறு  மொழியில் எழுதப்பட்ட திட்டங்களை கொண்டிருக்கலாம். இது டாட் நெட்டின் interoperability பண்பு மூலம் சாத்தியமாகிறது.
கன்சோல்  பயன்பாடுகள்.
Console பயன்பாடுகள் graphics இருக்காது. Characters மட்டுமே இருக்கும்.
Public static void Main(String args)
என்ற வாக்கியம் console பயன்பாடுகளின் நுழைவாயிலாக உள்ளது. Read,ReadLine,write,WriteLine ஆகிய system.console ல் உள்ள method களை
கன்சோல்  பயன்பாடுகள் உபயோகித்து கொள்கின்றன.
விண்டோஸ் பயன்பாடுகள்.
விண்டோஸ் பயன்பாடுகளுக்கு ஒரு உதாரணம் ms-word ஆகும்.
பொதுவாக கட்டளைகள் graphics மூலம் icon ஆக கொடுக்கப் பட்டிருக்கும்.
அவற்றை சொடுக்குவதன் மூலம் நாம் அவற்றை இயக்கலாம். டாட் நெட் கொண்டு இது போன்ற விண்டோஸ் பயன்பாடுகளை உருவாக்கலாம்.
Windows control
Tool box ல் உள்ள ஒரு கன்ரட்ரோல் அல்லது அதிக கன்ட்ரோல்களை கொண்டு புதிய  கன்ட்ரோல்களை உருவாக்கலாம். vb6 அல்லது vc++ கொண்டு  activex control  உருவாக்குவதை அறிந்தவர்கள் .நெட் கொண்டு உருவாக்குவது எளிது.
இணைய பயன்பாடுகள்.
இணைய தளங்க்களை asp.net கொண்டு உருவாக்கலாம்.வெப் சர்வரில் உள்ள asp.net engine,  asp.net வரிகளை இயக்கி html வரிகளாக மாற்றுகிறது.
இணைய உலாவி(browser) அவற்றை இயக்கி இணைய பக்கங்களாக மாற்றுகிறது. Asp.net கொண்டு நிகழ் நேர(dynamic) வெப் தளங்க்களை உருவாக்கலாம்.
இணைய சேவைகள்.
Web services எனபது மற்ற வெப் தளங்களுக்கு தகவல்களை பகிர்ந்து கொள்வது ஆகும். உதாரணமாக climate,stock market report  ஆகியவற்றை webservices மற்ற வெப் தளங்களுக்கு சேவையாக வழங்குகிறது.


பொதுவாக டாட் நெட்டின் நோக்கமே மென்பொருள்களை வழங்குவதே ஆகும். (software as services).


   -----மீண்டும் சந்திப்போம்
                                     ----முத்து கார்த்திகேயன்,மதுரை



No comments:

Post a Comment