Friday 11 November 2016

அறிவோம் சி-மொழியை-2ம் பாடம்

                                                                              -முத்து கார்த்திகேயன்,மதுரை

 Clanguage ஆனது பின் வரும் மென்பொருட்களை உருவாக்கப் பயன் படுகின்றது.
 Operating systems
compilers
database systems
graphics package
spread sheet
cad/cam applications
word processors
office automation
scientific and engineering applications

variable என்பது என்ன?

variable என்று அழைக்கப்படும் மாறியானது நினைவகங்களில் உள்ள இடங்களுக்கு நாம் இடும் பெயர்களாகும். ஒரு ,மாறியானது உபயோகப்படுத்தும் முன் அறிவிக்கப்பட வேண்டும்.
மாறியின் அறிவிப்பானது இரு விஷயங்களை நமக்கு கூறுகின்றது.
1.       மாறியின் பெயர்
2.       மாறியின் தரவினம்
உதாரணம்.
int x;
 இதில் x என்பது மாறியின் பெயர்.
int என்பது தரவினம்.

Executable statements:
இவை நிரலின் செயல் வரிகளாகும்.
இவை பெரும்பாலும் அரைப்புள்ளியால் (;) முற்றுப் ;பெற்றிருக்கும்.


Key words-
இவை reserved words என்றும் அழைக்கப்படுகின்றது.
இவற்றுக்கென்று ஏற்கெனவே நிர்ணயிக்ககப் பட்ட அர்த்தங்கள் உள்ளன.
பொதுவாக எல்லா நிரல் மொழிகளிலுமே key words ஐ அடிப்படையாக கொண்டு தான் நிரல்கள் எழுதப் படுகின்றன.
Key words  அட்டவனை

c-tokens:
இவை c-மொழியின் அடிப்படை கூறுகளாகும்.
அவையாவன:
Key words
Constants
Strings
Operators
Identifiers
Reserved  words.


Identifiers:

இவை மாறிகள்,வ்ழிமுறைகள்,அர்ரே போன்ற பயனர் உருவாகும் object களூக்கு இடப்படும் பெயர்களாகும்.
இவ்ற்றுக்கென்று சில விதி முறைகள் உள்ளன.
1.       இவற்றில் alphabets, digits, underscore(_) முதலியவை வரலாம்.
2.       ஆனால் முதல் எழுத்து alphabet ஆகவோ அல்லது underscore ஆகவோ மட்டுமே இருக்க வேண்டும்.
3.       Keywords ஐ பயன்படுத்தக் கூடாது.
4.       எந்த ஒரு special characterம் வரக்கூடாது(underscore  தவிர.).

குறிப்பு:

  Identifiers are case sensitive.அதாவது name என்பதும் NAME என்பதும் வெவ்வேறு      பெயராக C எடுத்துக் கொள்ளும்.
 மாறிலிகள்(constants).


இவற்றின் மதிப்புகளானது ஒரு தடவை நிர்ணயிக்கப் பட்டால் மீண்டும் மாறாது.
The type of constants are:
i)                   Numeric constant
ii)                Character constant
iii)              String constant



தரவினங்கள்(data types)

இவை மாறிகளில் என்ன விதமான மதிப்புகளை சேமிக்கப் போகின்றோம் என்பதை குறிப்பதாகும்.
அடிப்படை தரவினங்கள்.

Int
Float
Double
Char
Type modifiers:
எல்லா அடிப்படை தரவினங்களும் அதன் முன்னால் Type modifiers ஐ  ஏற்கின்றன.
அவையாவன:

Signed
Unsigned
Long
Short

Signed: இவை positive ஆகவோ அல்லது negative மதிப்புகளாகவோ இருக்கலாம்.
Unsigned; இவை positive மதிப்புகளை மட்டும் ஏற்கும்.

printf என்பது output செய்வதற்கான ஒரு லைப்ரரி ஃபங்சன் .
உதாரணமாக
Printf(“hello world”);
என்ற வரியானது hello world என வெளியீடு செய்யும்.

அதற்கு முன்னால் datatypes என்றால் என்ன என்று பார்ப்போம்.
Variable என்பது dataவை store பண்ணும் என்று பார்தோம். அடிப்படையாக டேட்டா ஆனது நான்கு வகையாக பிரிக்கப் படுகின்றது.

அவையாவன:
1.int
2.float
3.double
4.char

int என்பது முழு எண்களை குறிக்கின்றது.
உதாரணம் 10,86,2456

Float மற்றும் double ஆகியன floating point எண்களை குறிக்கின்றது.
உதாரணமாக 23.45,67.53 ஆகியன.

Double ஆனது float data type ஐ காட்டிலும் துல்லிதமாக மதிப்புகளை ஸ்டோர்
செய்யும்..

Char ஆனது single character யை store செய்யும்.
உதாரணம்

‘k’,’u’,’*’,’5’ என ஒற்றை character ஐ store செய்யும்.


இப்போது மறுபடியும் printf() பற்றி பார்ப்போம்.
இப்போது  a என்ற variable-லில் 10 என்ற மதிப்பு இருப்பதாக வைத்துக் கொள்வோம்.
printf(“%d”,a) 

இதற்கான வெளியீடு
10

%d என்பது int data type-ற்கான format specifier ஆகும்.

ஒவ்வொரு data type-ற்கும் ஒவ்வொரு format specifier உள்ளது.

int-%d
float-%f
double-%lf
char-%c

நாம் இப்போது பார்த்த printf() வரியில் %d ஆனது a –யின் மதிப்பால் replace செய்யப்படுகின்றது.

printf(“value of a is %d”,a);

என்ற வரியானது பின் வருமாறு வெளியீடு செய்கின்றது.

Value of a is 10.

இப்போது float data type –யை எடுத்துக் கொள்வோம்

float  x;
x=2.5

printf(“x is %f”,x)

வெளியீடு :

x is 2.5 

ஆகும்.

இப்போது

printf(“hai”);
printf(“hello”);
என்ற வரிகளானது haihello என்று ஒற்றை வரியில் வெளியீடு செய்யும்.
இப்போது இரு வரிகளில் வெளியீடு செய்ய
printf(“hai\n”);
printf(“hello”);
இப்போது வெளியீடானது
hai
hello
என இரு வரிகளில் அமையும்.
hai என்ற வார்த்தைக்குப் பின்னால் “\n” printf  வரியில் இருப்பதை கவனியுங்கள்.
“\n” ஆனது new line escape sequence எனப்படுகின்றது.
இது போல் நிறைய escape sequence உள்ளன. இவற்றில் “\n” என்ற escape sequence தான் அதிகம் பயன்படுத்தப் படுகின்ற்து.

Header files:

Header files களில் printf, scanf, clrscr() போன்ற library function –களின் declaration உள்ளன.உதாரணமாக stdio.h என்ற header file-ல் printf,scanf போன்ற library function-களின் declaration உள்ளது. Stdio.h என்ற file-ஐ include செய்தால் தான் printf,scanf போன்ற  library function –கள் வொர்க் ஆகும்..

Fomat specifiers:

இவை printf,scanf போன்றவற்றில் என்ன வகையான டேட்டாவை கையாளுகின்றோம் என்பதை குறிப்பிட பயன்படுகின்றது.

Int-%d,
Float-%f
Double-%lf
Char-%c
Long int-%ld
Char array(string)-%s
Unsigned int-%u

சில  உதாரண நிரல்கள்
//program 2.1
//program to add two numbers.
#include<stdio.h>
#include<conio.h>
void main()
{
int a,b,sum;
a=10;
b=15;
sum=a+b;
printf(“sum=%d”,sum);
getch();
}

Output:
Sum=25.

//program 2.2
//to calculate area of rectangle.
#include<stdio.h>
#include<conio.h>
void main()
{
int l,b,area;
clrscr()
 l=20;
b=30;
area=l*b;
printf(“area of rectangle=%d",area);
getch();
}
output:
area of rectangle=600

//program 2.3
//program to get and display a character.
#include<stdio.h>
#include<conio.h>
void main()
{
char c;
clrscr();
printf(“enter a character”);
scanf(“%c”,&c)
printf(“you have entered: %c”,c);
getch();
}
output:
enter a character a
you have entered a


Scanf பற்றிய விளக்கத்தை அடுத்த பாடத்தில் பார்க்கலாம்.


நான் மதுரையில் சொந்தமாக ப்ரோக்ராமிங் மொழிகளான c, c++, java, c#, vb.net, asp.net, php, html-5,css3, javascript மற்றும் வேலை வாய்ப்பிற்கான ms-office, tallyமுதலியவற்றை கற்பித்து வருகின்றேன்.
தொடர்புக்கு:
96293 29142
Email:muthu.vaelai@gmail.com


2 comments:

  1. வாழ்த்துகள் நண்பா நல்ல முயற்ச்சி தொடருங்கள்

    ReplyDelete
  2. திரு A.குரு அவர்களுக்கு நன்றி

    ReplyDelete