Thursday 16 June 2016

osx-க்கு டாட்டா. ஆப்பிள் டெஸ்க்டாப் ஆபரேடிங் சிஸ்டத்தின் புதிய பெயர் macos Sierra





ஆப்பிள் கம்பனியின் புதிய டெக்ஸ்டாப் ஆபரேட்டிங் சிஸ்டத்தின் புதிய பெயர் sierra என அந்த கம்பனி அறிவித்துள்ளது. பதினைந்து வருடங்களுக்கு பிறகு osx என்கின்ற பெயரை நீக்குவதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. பழைய அமைப்புகள் மீண்டும் உபயோகப்படுத்தப்படும் என்று கூறும் ஆப்பிள் அதன் பெயர் எளிய முறையில் MAC OS என்றழைக்கப்படும் என அறிவித்துள்ளது.

ஆப்பிளின் Craig Federighi அதன் புதிய வசதிகள் பற்றி அறிவித்துள்ளார். உதாரணத்துக்கு முதலில் ஆவர் கூறுவது Auto unlock பற்றி. ஆப்பிள் கைக்கடிகாரத்தை அருகில் கொண்டு வந்தாலே mac os sierra ஆனது Auto unlock ஆகும் என தெரிவித்துள்ளார். Federighi  இதை “time-of-flight networking" என்கின்ற முறையில் ஆப்பிள் கைகடிகாரத்தின் அருகாமையை sierra உணர்ந்து கொள்ளும் என அறிவித்துள்ளார்.எனினும் Federighi ,அன் லாக் முறையை ios கருவிகள் அணைத்தும் சப்போர்ட் செய்யுமா என்பது தெரிவிக்க வில்லை.

sierra ஆபரேட்டிங் சிஸ்டத்தின் அடுத்த வசதி universal clipboard.காப்பி மற்றும் பேஸ்ட் இப்பொழுது ios devices மற்றும் டெஸ்க்டாப் mac os இடையே தானியங்கி முறையில் அமையும் என கூறப்பட்டுள்ளது.. இது இரு திசை முறையில் இருக்கும் என தெரிகின்றது. அதாவது ios device-ல் இருந்து mac os-க்கோ அல்லது mac os-ல் இருந்து ios device-ற்கோ காப்பி செய்யலாம்.

icloud ஆனது sierra –வில் முக்கிய பங்கு வகிக்கலாம் என தெரிகின்றது. இதுmac to mac அல்லது mac to ios முறையில் ஃபைல் அல்லது ஃபோல்டர்களை பரிமாற்றம் செய்ய உதவும். optimized storage பழைய ஃபைல்களை icloud –க்கு தானாகவே உட்புகுத்தும் என்றும் இதனால் டிஸ்க் நினைவகம் clear செய்யப்பட்டு அதை மற்ற உபயோகதிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

நிறைய பயன்பாடுகளில் tabs அறிமுகப்படுள்ளது..sierra  பற்றிய அறிவிப்புகள் இன்னும் வரலாம் எனத் தெரிகின்றது

                                             முத்து கார்த்திகேயன்,மதுரை

2 comments:

  1. Good , informative and detailed post. Thanks.

    ReplyDelete
  2. சொல்லிக் கொள்ளும்படியான நிறைய புது வசதிகள் இல்லை. பெயரை பழையபடியே மாற்றி வைத்துள்ளனர். TvOS, WatchOS, iOS... வரிசையிலையே பெயர் வரட்டும் என்பதற்காக macOS என வைத்துள்ளனர். இது புது இயங்குதளம் அல்ல. புதிய பதிப்பிற்கான பெயர் மாற்றம் மட்டுமே.

    ReplyDelete