Monday 6 June 2016

Asp.net சில நுணுக்கங்கள்



இந்த கட்டுரையில் asp.net பற்றிய சில நுணுக்கங்களைப் பற்றி பார்க்கலாம்முதலில் DataGrid, Gridview மற்றும் ListView,Repeater இடையேயான வித்தியாசங்களைப்பற்றி பார்க்கலாம்.இவை நான்கும் Data Bound கன்ட்ரோல் ஆகும்.இவற்றின் வேலைகள் டேட்டாவை காண்பிப்பது,புதுப்பிப்பது,அழிப்பது ஆகியவை ஆகும்.இவை Label,TextBox,Dropdown list box ஆகியவற்றை கொண்டுள்ளது. Repeater, ListView, DataGrid ஆகியவை SqlDataSource அல்லது LinqDataSource உடன் Bound செய்யப்படுகின்றது

DataGrid கன்ட்ரோல்

இது asp.net 1.0 பதிப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டது. Sort செய்வதற்கு SortCommand event மற்றும் rebind grid ஆகியவை தேவை.update மற்றும் delete ஆகியவை கோடிங் மூலம் தாம் செய்யலாம்.GridView ஆனதை காட்டிலும் வேகமாக செயல் படக்கூடியது

GridView கன்ட்ரோல்

இது asp.net 2.0 பதிப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டது.சிறப்புகள் என்றால் paging மற்றும் sorting செய்வதற்கு built in support உள்ளது. மற்றும் update மற்றும் delete செய்வதற்கு built in support உள்ளது. Auto format வசதியை கொண்டுள்ளது.எனினும் DataGrid கன்ட்ரோலைக் காட்டிலும் மெதுவாக செயல் படக்கூடியது.

ListView கன்ட்ரோல்

இது asp.net 3.5 பதிப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டது.Data grouping,insert operation ஆகியவற்றிற்கு Build-in-support கொண்டுள்ளது.GridView கன்ட்ரோலைக்காட்டிலும் விரைவாகச் செயல்படக்கூடியது.Row செலக்ஸனை சப்போர்ட் செய்கின்றது.டேட்டா contents edit செய்யக்கூடியது.ரீபிட் டைரக்சனை வைத்து
டேட்டாவை vertical ஆகவோ அல்லது ஹரிஸாண்டல் ஆகவோ மாற்றலாம்.
.
Repeater கன்ட்ரோல்:
இது template driven கன்ட்ரோல் ஆகும்.டேட்டா சோர்ஸிலிருந்து தானாக columns generate செய்யாது. Row செலக்க்ஷன் செய்வதோ, contents எடிட் செய்வதோ இயலாது.இது மற்ற எல்லா data bound கன்ட்ரோலைக் காட்டிலும் light weight மற்றும் speed ஆக செயல் படக்கூடியது ஆகும்.
வெப் பக்கங்கள் மற்றும் இமேஜ் மீது right click செய்வதை தடுத்தல்.
சில சமயங்களில் வெப் பக்கங்கள் மீதோ அல்லது இமேஜ்களின் மீதோ right click செய்து அதை காப்பி செய்வதை நாம் தடுக்க விரும்பலாம்.அதை asp.net மூலம் எவ்வாறு செய்யலாம் என்பதைப்பார்ப்போம்.
<asp:Image ID="image1" runat="server" ImageUrl=""../Image/sun.png"" oncontextmenu="return false;" />
மேலே காட்டப்பட்டது asp:Image என்கின்ற செர்வர் கன்ட்ரோல் மீது எவ்வாறு right click செய்து காப்பி செய்வதை தடுக்கலாம் என்பதை. oncontextmenu="return false;" என்கின்ற கோடிங்கை சேர்ப்பதன் மூலம் அது நிறைவேற்றப்படுகின்றது.
இதுவே html image கன்ட்ரோலை காப்பி செய்வதை தடுக்க இதே வழியை பின் பற்றலாம்.
 <img alt="Image2" src="../Image/flower.png" oncontextmenu="return false;"/> 
பக்கம் முழுவதும் right click செய்வதைத் தடுக்க பின் வரும் வழியை பின்பற்றலாம்.
1.  <html>
2.  <head>
3.  ...
4.  </head>
5.  <body oncontextmenu="return false;" >
6.  ...
7.  </body>
8.  </html> 
Right clicking செய்யும் போது alert message box தோன்ற வைக்க பின் வரும் வழியை பின் பற்றலாம்.
1.  <script type="text/javascript"> 
2.  function disableRightClick() 
3.  { 
4.  alert("Sorry, right click is not allowed !!"); 
5.  return false; 
6.  } 
7.  </script> 
8.  <body oncontextmenu=" return disableRightClick();">
9.  ... 
10.</body> 
 

விரிவான error message தடுத்தல்

சில சமயங்களில் வெப் பக்கங்களை ஹோஸ்ட் செய்யும் போது பின் வருமாரு error message  காண்பிக்கலாம்.

இதை தடுத்து specific error தோன்ற வைக்க web.configஃபைலில் customErrors டேக் ஏற்படுத்தி அதன் mode ஆனது off செய்ய பட்டிருக்க வேண்டும்.
1.  <system.web> 
2.  <customErrors mode="Off">
3.   </customErrors> 
4.   ...
5.   ...
6.   </system.web> 
Autofill வசதியை தடை செய்தல்:
டெக்ஸ்ட் பாக்ஸில் நாம் உள்ளீடு செய்யும் தகவல்கள் அடுத்த தடவை டெக்ஸ்ட் பாக்சை உபயோகப்படுத்தும் போது ட்ராப் டௌன் லிஸ்ட் ஆக வெளிப்படும். சில சமயம் credit card  போன்ற வற்றின் தகவல்கள் அவ்வாறு வெளிப்படுவதை பின் வருமாரு தடுக்கலாம்.
<asp:TextBox Runat="server" ID="txtCreditcard" autocomplete="off"></asp:TextBox> 
டெக்ஸ்ட் பாக்ஸின் autocomplete என்கின்ற ப்ராப்பர்டிக்கு off என்று செட் செய்வதன் மூலம் இதை நிறைவேற்றலாம்.
முழு பக்கமும் தடை செய்ய பின் வரும் வழியை பின் பற்றலாம்.
1.  <form id="Form1" method="post" runat="server" autocomplete="off">
2.   .
3.   .
4.  </form> 
Code behind file-ல் கோடிங் மூலம் தடை செய்ய
txtCreditcard.Attributes.Add("autocomplete", "off"); 
என்பது போன்று பயன் படுத்தலாம்.

 நான் மதுரையில் FULL DOTNET பாடங்கள் வ்குப்புகள் நடத்தி வருகின்றேன்

CONTENTS:

C#, VISUAL C#,VB.NET,ASP.NET,ADO.NET,WPF WCF ,AJAX ,MVC,RAZOR, JQUERY,LINQ, GRID VIEW,CHART SQL SERVER ஆகியவை ஆகும்
                            -முத்து கார்த்திகேயன்,மதுரை

No comments:

Post a Comment